Thursday, 22 January 2026

 எம்பார் வைபவம்

விச்வாவஸு வருடம் (31-01-2026) - எம்பார் ஆயிரமாவது ஆண்டு - வண்ணப்படங்களுடன் சிறப்பு வெளியீடு

ஆதார நூல் - ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம்

வண்ணப்படமாக வெளியீடு: வாசுதேவ ராமனுஜதாசர், ஸ்ரீ வாசு திவ்யதேச யாத்ரா, ஸ்ரீ லோககுரு டிரஸ்ட், ஸ்ரீரங்கம்.

எம்பரின் ஆச்சர்ய பக்தி



நாள்தோறும் கோவிந்தபட்டர் (எம்பார்) தமக்கு தாய்மாமா அவர்களாகவும், ஆசார்யருமான பெரிய திருமலை நம்பிகளுக்கு படுக்கை போட்டு அதன்மேல் படுத்துக் கொண்டு பின்னால் ஸ்வாமியை சயனித்துக் கொள்ளும்படி விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்.

இந்த விஷயத்தை ஒருநாள் உடையவர் பார்த்து "இது என்ன?" அநியாயமாக இருக்கிறது. ஆசாரியன் படுக்கை ஏறலாமா? என்று நினைத்து திருமலை நம்பிகளிடம் விண்ணப்பிக்க,

அவர் கோவிந்த பட்டரை அழைத்து ஆசாரியன் படுக்கையில் ஏறினவர்களுக்கு என்ன கதி என்று கேட்க, நரகம் தான் கதி என்று கோவிந்த பட்டர் சொல்ல, நம்பி "அப்படியானால் தெரிந்திருந்தும் நீர் ஏன் செய்தாய்?" என்று கேட்க,

"ஸ்வாமி! நான் நரகத்தை அடைந்தாலும் ஸந்தோஷம் தான் ! தேவரீர் படுக்கையின் மேல் முள், கல் முதலான கடினமான பொருள்கள் இருந்தால் உங்களுடைய தூக்கத்துக்கு பங்கமாகும் என்று எண்ணியே இப்படிச் செய்கிறேன்" என்று விண்ணப்பிக்க எல்லோரும் கேட்டு அவருடைய ஆசார்ய பக்திக்கு ஸந்தோஷித்தார்கள். 

எம்பரின் சர்வபூத தயை 


ஒரு நாள் கோவிந்த பட்டர் தோட்டத்தில் புஷ்பங்கள் பறிக்கும் போது, ஒரு புதரில் பாம்பின் வாயில் முள்குத்திக் கொண்டு துக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

 அதைப் பார்த்து சர்வபூத துக்கத்தைக் கண்டு சகித்துக் கொள்ளாதவராய் கோவிந்த பட்டர் ஒரு கையில் பாம்பு தலையை பிடித்துக் கொண்டு, ஒரு கையில் அதன் வாயிலிருக்கும் முள்ளை பிடுங்கி, பாம்பை மெதுவாக விட்டு அருகில் இருந்த குளத்தில் நீராடினார்.

இந்த நிகழ்ச்சியை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த உடையவர், கோவிந்த பட்டருடைய மிகுந்த பூத தயைக்கும் ஆசார்ய நிஷ்டைக்கும் சந்தோஷித்து அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு போக நிச்சயித்தார்.

ராமானுஜருக்குக் கிடைத்த பரிசு 


இதற்குள் ஸ்ரீமத் ராமாயணம் முடிவடைந்தவுடன் எம்பெருமானார் ஸ்ரீரங்கத்துக்கு செல்வதற்கு அனுமதி கொடுக்கும்படி பெரிய திருமலை நம்பியை கோரினார். நம்பிகள் தம்முடன் இவரை அனுப்புவதற்கு முன்பு ஏதாவது கிஞ்சித் சமர்ப்பிக்க வேண்டுமல்லவா (அது என்னவென்றால் ராஜகுமாரரான யுதாஜித்து தன்னுடைய மருமகனான பரதனை  அயோத்திக்கு திரும்பி அனுப்பும்போது பரிசுப் பொருட்களோடு அனுப்பியது போல்) அப்பொழுது சமர்ப்பித்து சச்சிஷ்யரான உடையவர் திருவுள்ளம் பிரகாரம் சமர்ப்பிப்பது நல்லதென்று எண்ணி,

உடையவரைப் பார்த்து "உனது  ப்ரதிக்கு அநுரூபமாக உனக்கு ஏதாவது கொடுத்து அனுப்புவது எங்கள் ஸ்வரூபம். ஆதலால் உன் விருப்பமான பொருளை கேட்கவும் கொடுப்பேன்" என்று சாதிக்க, உடையவர் ஸ்வாமி ! உங்கள் திருவுள்ளத்தின்படி எனக்கு விருப்பமான கோவிந்தபட்டரை க்ருபை செய்யவும் என்று கோரினார்.

 அப்படியே நம்பிகள் கோவிந்தபட்டரை அழைத்து, கையைப் பிடித்து, உடையவர் கையில் வைத்து தானமாகக் கொடுத்து, கோவிந்தபட்டரைப் பார்த்து "கோவிந்தா! என்னைப் பார்ப்பது போல் எம்பெருமானாரை குரு பாவனையில் கைங்கர்யம் செய்து கொண்டிரு" என்று நியமித்தார்.


 உடையவர் கோவிந்த பட்டரை அழைத்துக் கொண்டு, வரும் வழியில் கடிகாசலம், திருப்புட்குழி சேவித்துப் பின்னர் காஞ்சீபுரத்திற்கு வந்து 13 திவ்ய தேசங்களைச் சேவித்து, திருக்கச்சி நம்பிகளை சேவித்தார். 

ஆனால் கோவிந்த பட்டருக்கு தம் ஆசார்யரைப் பிரிந்தது அவனை விட்டகன்று உயிராற்றகில்லா” (திருவாய்மொழி 9-9-11) என்ற பாசுரம் கூறுவது போல  சகிக்காமல், இரவில் தூக்கம் வராமலும், பகலில் ஆகாரம் எடுக்காததாலும் அவரது உடல் தளர்ந்து, முகம் வாடியிருந்ததை உடையவர் பார்த்து கோவிந்தபட்டரே, நீ  உன் ஆசார்யரான நம்பிகளை சேவித்துக் கொண்டு வா" என்று கூறி, அவருடன் இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்களை துணையாக அனுப்பினார்.

          கோவிந்த பட்டரும் ஆவலுடன் திருமலை சென்று நம்பிகளுடைய திருமாளிகைக்குத் தண்டம் சமர்ப்பித்து, வாசலில் நிற்க, இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் உள்ளே சென்று நம்பிகளுக்கு வந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள். பெரிய திருமலை நம்பிகளுக்கு இவருடைய வரவு மனக்கஷ்டம் ஏற்பட்டு, "வந்தவனைப் போகச் சொல்லுங்கள்" என்று சினத்தோடு கூறினார்.

           இவருடைய மனைவி இந்த வார்த்தைகளைக் கேட்டு "இவ்வளவு தூரத்திலிருந்து வந்த குழந்தையை அழைத்து, முகம் காட்டி, ஸ்ரீபாத தீர்த்த தளிகை பிரசாதங்கள் கொடுக்கக் கூடாதா?" என்று விண்ணப்பிக்க, நம்பிகள் "விற்ற பசுவுக்கு புல்லிடுவாருண்டோ?" என்று கோபத்துடன் கூறி, முகம் காட்டாமலிருக்க, வெளியிலிருக்கும் கோவிந்த பட்டர், இந்த வார்த்தைகளைக் கேட்டு வருத்தத்தோடு, தண்டம் சமர்ப்பித்து திருமலையிலிருந்து திரும்பி உடையவர் எழுந்தருளியிருக்கும் இடத்துக்கு வந்து விட்டார். இந்த விஷயம் உடையவர் அறிந்து நம்பிகளுடைய ஸர்வக்ஞத்வத்தை புகழ்ந்து, கோவிந்த பட்டரை அழைத்துக் கொண்டு திருவரங்கத்துக்கு எழுந்தருளினார்.

ஒருசமயம் கோவிந்த பட்டரைப் புகழ்ந்து ஸ்தோத்திரம் செய்த ஒருவரிடம், அவர் ஒக்கும், ஒக்கும்என்று ஆமோதித்தார். இதைக் கேள்விப்பட்ட  எம்பெருமானார், இது தற்பெருமை அல்லவா? இவ்வாறு சொல்லலாமா? என்று கோவிந்த பட்டரிடம் கேட்க, அதற்கு கோவிந்த பட்டர், இந்தப் பெருமைகள் அனைத்தும் என்னுடையவை அல்ல; பொருளல்லாத என்னைப் பொருளாக்கிய தேவரீருக்கே இவை உரியது. அதனால் தான்ஒக்கும், ஒக்கும்என்று சொன்னேன் என்றார்.

எம்பெருமானார் விஷயமாக கானம் பன்னின தாஸி வாசலில் தன்னை மறந்து இருத்தல்.


ஒருமுறை தாஸி வீட்டு வாசலில் அமர்ந்திருந்த கோவிந்த பட்டரைசிஷ்யர்கள் எம்பெருமானாருக்குத் தெரிவிக்க, கோவிந்த பட்டர் "ஸ்வாமி தாஸி வாசல் அதுவென்று எனக்குத் தெரியாது. தேவரீருடைய விஷயமாக திருப்பள்ளியெழுச்சி ஆனந்தமாக பாடிக் கொண்டிருப்பதால் ஆசார்ய குணாநுபவத்துக்கு ஈடுபட்டு உட்கார்ந்திருந்தேனே தவிர வேறு எதுவும் அறியவில்லை" என்று விண்ணப்பிக்க,

சிஷ்யர்கள் எல்லோரும் தம்முடைய தவறை தெரிந்துக் கொண்டு ஆசார்ய குணாநுபவத்தில் ஈடுப்பட்ட கோவிந்த பட்டர் விஷயத்தில் அபசாரப்பட்டோமென்று பச்சாதாப பட்டு எம்பெருமானார் சந்நிதியில் அபராதக்ஷமாபணம் பண்ணிக் கொண்டனர்

தனக்கு ஏகாந்தம் இல்லாததால் எம்பார் தன் மனைவியிடம் மறந்து இருத்தல்


கோவிந்தபட்டருக்குத் திருமணம் நடந்த பிறகு, கோவிந்தப் பெருமாளை அவர் தாயார் அழைத்து, உம் மனைவி பக்குவமானாள் (பெரியவள் ஆனாள்); அவளோடு தனித்திருக்கவேண்டும் என்று கூற, இவர் தன் தாயிடம்,இருட்டும் தனியாய் இருக்கும்போது சொல்லுங்கள் அப்போது வந்து அவளுடன் கூடுகிறேன் என்றாராம்.

 பலநாட்கள், இது நடக்காமல் போகவே, அவர் தாயார் எம்பெருமானாரிடம் சென்று, தன் மகன் மனைவியுடன் கூடாமல் இருக்கிறான் என்று கூற, எம்பெருமானார் அவரை அழைத்து, "கோவிந்தரே! இது நம் ஆணை! ருது காலத்திலேயே உம் மனைவியோடு இருந்து வாரும்" என்று சொல்லி அனுப்பிவைத்தார். கோவிந்தரும், ஏகாந்தத்தில் அந்தர்யாமியையும் (எம்பெருமான் எங்கும் உறைபவன்) அவன் குணங்களையும் எடுத்துரைத்து, தன் மனைவியைத் திருப்பி அனுப்பிவைத்தார்.

                  எம்பெருமானார்  எம்பாருக்குக்  காக்ஷாயம்  கொடுத்தல்.


இதுகண்ட அவர் தாய், இப்படிச் செய்வது சரியல்ல என்று கூற, அதற்கு அவர், இருள் அறையிலும் எம்பெருமான் அந்தர்யாமியாய் வியாபித்திருக்கிறான்; அப்படி இருக்கும்போது, அவன் முன்னே இந்தத் தவற்றைச் செய்தால் அது சரியாகுமோ என்று கேட்க, இவருடைய வைராக்யத்தைப் புரிந்துகொண்டு எம்பெருமானார்


இல்லறமில்லேல் துறவறம் இல்லை" (திருமழிசைப்பிரான், நான்முகன் திருவந்தாதி) என்றபடி கோவிந்தப் பெருமாளுக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலானவைகளைக் கொடுத்து, அவருடைய பெயரை "எம்பார்" என்று சுருக்கிவைத்து அவரைப் பெருமைப் படுத்தினார்.


யாதவப்ரகாசர், ராமானுஜரை கொல்வதற்காக சதி ஆலோசனை செய்வதை கோவிந்தபட்டர் கேட்டு ராமானுஜரை தப்பி செல்ல வைத்தல்